புலம்பெயர் தொழிலாளர்களின் நல்வாழ்வு! செயற்படுத்தப்படும் காப்புறுதி திட்டம்
எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு நடவடிக்கை
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலத்தைப் போல் அல்லாமல், தற்போது எமது நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம்.
வீட்டுப் பணிகளுக்காக ஊழியர்களை உள்ளடக்கிய விரிவான காப்புறுதிக் கொள்கையை நாங்கள் செயற்படுத்தி ஏனைய பிரிவினருக்கும் இதனை விரிவுபடுத்தியுள்ளோம்.
மேலும், பணியாளர்கள் நன்கு பயிற்சியளிக்கப்பட்டு சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்வதற்காக, கட்டாயப் பயிற்சி மற்றும் புறப்படுவதற்கு முந்திய சுகாதாரப் பரிசோதனைகள் என்பன முன்னெடுக்கப்படுகின்றன.
சட்டவிரோத குடியகல்வு மற்றும் மனிதக்கடத்தல் ஆகியவை சவால்மிக்கவை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
இந்த சவால்களுக்கு முகங்கொடுக்க பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் ஒரு சிறந்த செயலணியொன்றை நிறுவியிருப்பதுடன், இதுபற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
