கொழும்பில் 24 மில்லியன் ரூபா மோசடியில் சிக்கிய பெண்
கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, இத்தாலி, டுபாய் ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய 2 பெண்கள் உட்பட மூவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (31) கைது செய்துள்ளனர்.
வேலைவாய்ப்புப் பணியகத்தின் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 24 மில்லியன் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவர் கந்தானை பிரதேசத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கந்தானை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் பெற்று வேலை வாய்ப்பு நிலையம் ஒன்றை நடத்தினாலும், மேற்படி நாடுகளில் தொழில் வழங்குவதற்கான முறையான அனுமதிப்பத்திரம் அந்த நிறுவனம் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
19 முறைப்பாடுகள்
குறித்த பெண்ணுக்கு எதிராக பணியகத்திற்கு 19 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று (01) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அத்துடன் சீதுவ, லியனகேமுல்ல பிரதேச பணியகத்தில் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோத வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று நடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, புலனாய்வு அதிகாரிகள் நேற்று (31) அந்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
அங்கு, ஜெர்மனி, டுபாய் மற்றும் கனடாவில் வேலை வழங்குவதற்காக பெறப்பட்ட 13 கடவுச்சீட்டுகள் மற்றும் 11 பயோடேட்டாக்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
மேற்படி இடத்தின் உரிமையாளரான அமண்தொலுவ என்பவர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று (01) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Tamizha Tamizha: என் மனைவி அமைதியா இருக்கானு மட்டும் நினைக்காதீங்க... தொகுப்பாளரிடம் குமுறிய கணவர் Manithan

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா? News Lankasri

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam
