வெளிநாட்டு இராணுவம் இலங்கைக்குள் நுழையும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாடு அரசியல் ரீதியில் ஸ்திரமற்று இருக்கும் போது, இலங்கையின் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவித்து வெளிநாட்டு இராணுவங்கள் நாட்டுக்குள் நுழைந்து, எமது சுதந்திரம் மற்றும் உரிமைகளை இல்லாமலாக்கி, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கு இடமிருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டிருப்பதை போராட்டக்காரர்களாலும், அரசியல் கட்சிகளாலும் சகித்துக் கொள்ள முடியாது, அவர் தொடர்ந்தும் அதிகாரங்களை பயன்படுத்த முயற்சிப்பது அரசியல் நல்லிணக்கத்துக்கு பாதிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,