மன்னாரில் பல இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் மீட்பு
மன்னாரில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - மன்னார் பேருந்தில் சிகரெட் பெட்டிகளை கடத்தி வந்த நிலையில் மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நேற்றைய தினம் (19.09.2023) கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் 9 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பகுதியை சேர்ந்த 25 வயதான நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சந்தேகநபரிடம் மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருள் மற்றும் சந்தேகநபரை முன்னிலைப்படுத்த உள்ளனர்.

திலீபனின் நினைவேந்தல் ஊர்தியால் தமிழ்- சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு தோன்றும்: தயாசிறி (Video)
இதேவேளை, சந்தேகநபரிடம் இருந்து 2900 எண்ணிக்கை உடைய சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் தற்போதைய சந்தை மதிப்பு 5 இலட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





