மட்டக்களப்பிற்கு படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்! குவியும் மக்கள்
மட்டக்களப்பு, குருக்கள்மடம் - ஏற்றாழைக்குளத்திற்கு மீண்டும் இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளன.
குறித்த கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாழை குளம், பறவைகள் சரணாலயத்தை அண்மித்த ஈரநிலப் பகுதிகளில் Australian White Ibis என்ற புலம்பெயர் பறவைகள் வருகை தந்துள்ளன.
இனம் தெரியாத பறவை கூட்டம்
இந்த பறவைகள் கூட்டம், அப்பகுதிக்கு மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை வனப்பிற்கு மேலும் மெரூகூட்டும் வகையில் அமைந்துள்ளது.
அத்துடன், குறித்த பறவை இனம் வருடாந்தம் மார்கழி, தை, மாதங்களில் இப்பிரதேசத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருகை தருவதாகவும் பின்னர் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் குஞ்சுகளுடன் அவுஸ்ரேலியா நாட்டிற்குத் திருப்பிச் செல்வதாகவும் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த காலப்பகுதியில் இவ்வாறு பிரமிக்கத்தக்க பறவைகளின் அழகை உள்நாட்டு - வெளிநாட்டவர்கள் என அனைவரும் வருகை தந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில் அப்பறவைகள் அமைந்துள்ள சரணாலய பகுதியில் சிலர் பொறுப்பற்ற விதத்தில் தொடர்ச்சியாக கழிவுகளையம் வீசி வருவதால், அதனை சாப்பிட்டு பறவைகள் இறக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் இந்த பறவைகளை சிலர் இறைச்சிக்காக வேட்டையாடுகிறார்கள் என்றும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.









