நாட்டை மீட்டெடுத்த பாரிய பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவையே சாரும்: டக்ளஸ் எடுத்துரைப்பு
பொருளாதார பிரச்சினையிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்த பாரிய பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவையே சாரும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - தரும்புரம் வைத்தியசாலை மற்றும் போதைப் பொருள் புணர் வாழ்வு. நிலையம் ஆகியவற்றின் நிலைமைகளை பார்வையிட்ட அதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்
தொடர்ந்து குறிப்பிடுகையில் “கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்திய தேவைகளை நிவர்த்தி செய்து தருமாறு இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ஜனாதிபதி உறுதி
இந்த கோரிக்கைகளை நான் அமைச்சரவையில் கொண்டு சென்று தேவைகள் குறித்து முன்வைக்க இருக்கின்றேன்.
குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாயை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு அமைச்சரவையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதற்கு ஜனாதிபதியும் உறுதிமொழி வழங்கியிருக்கின்றார். அதேபோல இந்த வைத்தியசாலையினுடைய தேவைகள் தொடர்பாகவும் நான் அமைச்சரவையில் முன்வைக்க இருக்கின்றேன்.
குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளாக இருந்தாலும் சரி இந்த நிலைமைகளில் இருந்து இந்த நாட்டை மீட்டெடுத்த பாரிய பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவையே சாரும்.
ஆகவே அவருக்குத்தான் எங்களுடைய ஆதரவும் இருக்கும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
