உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கமே முழு பொறுப்பு! - பிரசன்ன ரணதுங்க
நல்லாட்சி அரசாங்கம் தமது பொறுப்புக்களை சரியாக செய்திருக்குமானால் கறுப்பு ஞாயிறு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை இன்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருப்பது, உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களை இழிவுப்படுத்தும் செயல் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கமே முழுமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். ரணில், மைத்திரி உட்பட முன்னைய அமைச்சரவையின் அனைவரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கிய சிறுபான்மையினக் கட்சிகளும் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு எதிரானவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுமே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு பொறுப்பு என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
