யாழில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக தண்டம் விதிப்பு
யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனையில் ஈடுபட்ட உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழக்கு விசாரணை இன்று (09.04.2026) நீதிமன்றத்தில் எடுத்துக் கொண்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
25 ஆயிரம் ரூபாய் தண்டம்
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், வீதியோர உணவு விற்பனை நிலையங்களில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய விற்பனை நிலையங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

இதற்குப்பின்பு, குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் தொடர்ந்து சுகாதார விதிமுறைகளை மீறி உணவு விற்பனையில் ஈடுபட்ட ஐந்து வீதியோர உணவு விற்பனை நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின், உணவு விற்பனை நிலைய உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதால், நீதிமன்றம் அவர்களை கடுமையாக எச்சரித்து, 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.