மாவடிவேம்பு வைத்தியசாலையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் உணவை மாவடி வேம்பு பிரதேச வைத்தியசாலை நோயாளிகளுக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரருக்கும், மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவை வழங்கிய கடை உரிமையாளரிற்கும் நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துள்ளதுடன் அனுமதியையும் இரத்துச்செய்துள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி
மனித நுகர்விற்கு பொருத்தமற்றவகையில் உணவை மாவடி வேம்பு பிரதேச வைத்தியசாலை நோயாளிகளுக்கு வழங்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து 21-05-2024 அன்று செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி,செங்கலடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அங்கு மனித நுகர்விற்கு பொருத்தமற்றவகையில் உணவுகள் இனங்காணப்பட்டதையடுத்து வைத்தியசாலைக்கு நோயாளிகளுக்கு உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரர், மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவை வழங்கிய கடை உரிமையாளரிற்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் அன்றைய தினம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் முடிவில் நேற்று ( 08.07.2024 ) நீதிவானினால் " உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரரின் ஒப்பந்தத்தினை உடனடியாக இரத்து செய்ததுள்ளது.
மேலும், ஒப்பந்தகாரரிற்கு 10,000 ரூபா தண்டப்பணமும் அதை உரிய தவணையில் கட்டத்தவறின் 3 மாதகால சிறைத்தண்டனையும் 10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறை தண்டனையும் அத்துடன் மனித நுகர்விற்கு பொருத்தமற்றமுறையில் உணவை உற்பத்தி செய்த கடை உரிமையாளரிற்கு 5,000 ரூபா தண்டப்பணமும் ஒரு மாதகால சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |