நாட்டில் ஏற்படவுள்ள கடுமையான உணவுப்பற்றாக்குறை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய உணவு கொள்கலன்கள் தேங்கி வருவதை தடுக்க இறக்குமதியாளர்கள் நீண்ட கால தீர்வைக் கோருகின்றனர்.
அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறையால், சீனி உட்பட்ட பொருட்கள் அடங்கிய 1,300 க்கும் மேற்பட்ட கொள்கலன்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கலன்களில் சுமார் 800களில் உணவுப்பொருட்களும் 400களில் அத்தியாவசிய உணவுப்பொருட்களும் உள்ளதாக சுங்கப்பணிப்பாளர் மேஜர் ஜி.வி. ரவிர்பிய (Ji.Vi. Ravirpiya) தெரிவித்துள்ளார்.
இறக்குமதியாளரின் பரிவர்த்தனைகளை முடியாமல் பொருட்களை துறைமுகத்தில் இருந்து வெளியனுப்ப முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சில கொள்கலன்களை விடுவிக்கும் உத்தரவைப் பிறப்பித்தார். இருப்பினும், இந்த உத்தரவு 500 சீனி கொள்கலனுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பிரதமருடனான சந்திப்பின் போது, இறக்குமதியாளர்கள் இறக்குமதிக்கு போதுமான அமெரிக்க டொலர்கள் இருப்பதை உறுதி செய்ய நீண்ட கால தீர்வு தேவை என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் மேலும் உணவுப் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.