பிரித்தானியாவில் உணவு பற்றாக்குறை! - இங்கிலாந்து மக்களுக்கு ஏற்பட போகும் நெருக்கடி
பிரித்தானியாவில் முன்னரைப் போன்று பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் பரவலாக கிடைக்காது என முன்னணி தொழில்துறை வர்த்தகர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும், இது மக்கள் சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்று அர்த்தப்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவு மற்றும் பான கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி இயன் ரைட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரசு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
“இங்கிலாந்து மக்கள் தாம் விரும்பும் எந்தப் பொருளையும் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கும் நாட்கள் முடிந்துவிட்டதாக” அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பல வணிகங்கள் அண்மைய நாட்களில் தங்கள் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ள.
சில பல்பொருள் அங்காடிகளின் அலமாரிகள் வெறுமையாகிவிட்டன. உணவகங்கள் தங்கள் பட்டியலில் இருந்து பொருட்களை நீக்குமாறு கட்டாயப்படுத்துகின்றன.
The farm to fork supplyஇன் விநியோகச் சங்கிலிகளில், இந்த துறையில் வழக்கமாக வேலை செய்யும் நான்கு மில்லியன் மக்களில் அரை மில்லியனைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றுநோய் மற்றும் பிரெக்சிட் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் இங்கிலாந்தை விட்டு வெளியேறுவதே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட இயன் ரைட், “இந்த நிலை மேலும் மோசமாகிவிடும், மோசமாகிவிட்ட பிறகு அது சரியாகிவிடப் போவதில்லை. தற்போது ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையால் உணவு இல்லாமல் என்று அர்த்தப்படாது.
எவ்வாறாயினும், இங்கிலாந்து மக்கள் தாம் விரும்பும் எந்தப் பொருளையும் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கும் நாட்கள் முடிந்துவிட்டதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.