நாட்டின் உணவுப் பொருட்களின் விலைகள் குறித்து வெளியான தகவல் ...!
சீனாவின் கடன் மறுசீரமைப்பைப் புறந்தள்ளி இலங்கைக்குச் சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கினால், பணவீக்கத்தின் வேகம் கட்டுக்குள் இருந்தாலும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என இன்டர்பிரிட்டர் இணைத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வழங்கிய கடனை இரண்டு வருடங்களுக்கு மாத்திரமே மறுசீரமைக்கச் சீனா இணங்கியுள்ள நிலையில், அந்த நாட்டின் உதவியில்லாமலேயே, இலங்கைக்கு அவசர நிதியுதவியை வழங்க, சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
எனினும், இந்த வசதியின்போது, சீனா, சர்வதேச நாணய நிதிய நிதியளிப்பு மற்றும் எந்த மறுசீரமைப்பு ஒப்பந்தத்திலிருந்தும் பயனடையக்கூடும்.
பொருளாதார நெருக்கடி
அதே நேரத்தில், மற்ற கடன்கொடுனர்களைக் காட்டிலும் கடன் நிவாரணத்தில் குறைவாகவே பங்களிக்கும் நிலை ஏற்படும் என்று தெ இன்டர்பிரிட்டர் இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்குச் சர்வதேச நாணய நிதியம் வழங்கப்போகும் கடன், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் ஆழமான மனித செலவுகளை மாற்றியமைக்கச் சிறிதும் உதவாது.
பணவீக்கத்தின் வேகம் கட்டுக்குள் இருந்தாலும் உணவு விலைகள் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று இன்டர்பிரிட்டர் குறிப்பிட்டுள்ளது.
அதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி, இலங்கைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு
நிதி சுவாசத்தை மட்டுமே உருவாக்கும் என்றும் அந்த இணையம் குறிப்பிட்டுள்ளது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
