கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலை குறைப்பு
ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவுகளின் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்படும்.
விலைக்குறைப்புக்கான காரணம்
இது தொடர்பில் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளார்.
மேலும், இந்த விலைக்குறைப்பு மற்றும் சலுகைகளை வழங்காத உணவக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, சமீபகாலமாக முட்டை விலை குறைந்துள்ளதால் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
