உலகளவில் கடுமையாக அதிகரித்துள்ள உணவு விலைகள்!
கடந்த 2021ஆம் ஆண்டு உலக உணவு விலையானது கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, 2021ஆம் ஆண்டில் உலக உணவு விலையானது, 2020ஆம் ஆண்டை விடவும், 28 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு விலைச் சுட்டெண்ணானது, 2021ஆம் ஆண்டு சராசரியாக 125.7 சதவீதமாக பதிவாகியுள்ளதுடன்,ஒரு தசாப்தத்தில் பதிவான அதிகபட்ச அதிகூடிய சராசரி இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமையின் விலை 31.3 சதவீதத்தினாலும், தானியங்களின் விலை 27 சதவீதத்தினாலும், சோளத்தின் விலை 44.1 சதவீதத்தினாலும் அதிகரித்திருந்ததாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை,இறைச்சி வகைகளின் விலை 12.7 சதவீதத்தினாலும், பால் உற்பத்திப் பொருட்களின் விலை 16.9 சதவீதத்தினாலும் அதிகரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.