தொடர் சிக்கலால் திணரும் கனேடியர்கள்..
உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கனேடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வெளியான புள்ளிவிபர கூற்றுப்படி, செப்டெம்பர் மாதத்தில் கனேடியர்கள் உணவு பொருட்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட நான்கு சதவீதம் அதிகமாகச் செலுத்தியுள்ளனர்.
இது தீவிர விலை அதிகரிப்பு நிலையை காட்டுவதாக குறித்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கட்டணங்களை செலுத்துவதில் சிக்கல்
மேலும், இந்நிலைமையானது கடுமையான வானிலையால் ஏற்பட்ட பயிர் பிரச்சினைகள், தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் கட்டணங்கள் என்பவற்றால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, கனேடியர்கள் தங்களது கட்டணங்களை செலுத்த சிரமப்பட்டு வருவதாகவும் குறைந்தது 20 வீதமானோர் ஏதேனும் ஒரு கட்டணத்தையாவது செலுத்தாமல் இருப்பதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், 55 வயதுக்கு குறைவானவர்கள், உணவுக்காக கார் கடன், கிரெடிட் கார்டு அல்லது மின்சார கட்டணங்களை நிலுவையில் வைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், 18 முதல் 34 வயதுடையோரில் 18.1 வீதமானோர் சில சமயங்களில் அல்லது அடிக்கடி கட்டணம் செலுத்தாமல் விட்டதாக கூறியுள்ளனர்.
35 முதல் 54 வயதினரிலும் இதேபோல 17.9 வீதமானோர் தெரிவித்துள்ளனர். ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்களில் அது வெறும் 4.2 வீதமாக மட்டுமே இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam