கிளிநொச்சியில் முன்பள்ளி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி (Photos)
கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பால்பைகற் ஒவ்வாமையால் 13 மாணவர்கள் வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் நடைமுறைக்கு ஊடாக நிறுவனமொன்று பொதியிடப்பட்ட பால் பைகற்றுகளை வழங்கியுள்ளது.
குறித்த பால் பைகற்றுகளை அருந்திய பின்னரே மாணவர்களுக்கு வாந்தியும், வயிற்றோட்டமும் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சிகிச்சை
இதனையடுத்து
உடனடியாக மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்ட நிலையில் அங்கு பல வைத்தியர்கள் ஒன்றிணைந்து உடனடியாக
சிகிச்சையளித்துள்ளனர்.
மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலைமையில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பால் பைகற்றின் மாதிரிகள் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி
நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலையின்
பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
