தமிழீழ இறுதி போர்! இராணுவத் தளபதியின் வாக்குறுதி - பொன்சேகாவின் புதிய நூல் வெளியானது
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய ''தமிழீழ மீட்பு'' இறுதி போர் தொடர்பான ஆங்கில நூல் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
‘இராணுவத் தளபதியின் வாக்குறுதி - இந்த போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு விட்டு வைக்கவில்லை ’ என்ற தலைப்பைக் கொண்டு சரத் பொன்சேகா இந்த நூலை எழுதியுள்ளார்.
கலந்து கொண்டவர்கள்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற அருண ஜெயசேகர பிரதம விருந்தினராகவும், பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் ஓய்வு பெற்ற சம்பத் துய்யகொண்தா விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வெளியீட்டு விழாவில் மூத்த இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், விருந்தினர்கள், பொன்சேகாவின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் நடைபெற்ற ஆயுத போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தை இந்தப் புத்தகம் உள்ளடக்கியுள்ளது.




