பிள்ளைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துங்கள்: சச்சின் டெண்டுல்கர்(Video)
பிள்ளைகளுடன் நேரத்தை பெறுமதியாக செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் பிள்ளைகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் நாம் முதலீடு செய்கின்றோம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் யுனிசெப்பின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான நல்லெண்ணத் தூதுவருமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சச்சின் தனது இலங்கைக்கான நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இன்று(08.08.2023)கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு அவரது விஜயம் குறித்து கூறுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாடசாலை மாணவர்கள் மிகுந்த மன உறுதியுடன் இருப்பதுடன் சிறந்த எதிர்காலத்திற்கான அவர்களின் நம்பிக்கையும் வலுவாகக் காணப்படுகின்றது.
அவர்கள் தங்களது இலக்குகளை அடைவதற்கு தொடர்ந்தும் நாம் உதவ வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் சப்ரகமுவ மாகாணத்தில் யுனிசெப்பினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டத்தை பார்வையிட்டுள்ளார்.
அத்துடன் அங்குள்ள சில பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட சச்சின் டெண்டுல்கர், பெருந்தோட்டத்துறைப் பகுதிகளில் வாழும் மக்களையும் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |