அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை
களு கங்கையின் நீரேந்து பகுதிகளை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்,
களுகங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக, களுகங்கையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.
சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடா ஆறு, மகுர ஆறு மற்றும் அவற்றின் வெள்ள சமவெளியில் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.

இதன் காரணமாக, குடா கங்கை மற்றும் மகுர கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகள் ஊடாக செல்லும் குறுக்கு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகிறது. இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பிரதேசங்கள் ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுநர்களும் மிக விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri