வெள்ள அபாய எச்சரிக்கை! முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Mullaitivu Sri Lankan Peoples Weather
By Shan Jan 08, 2026 12:57 PM GMT
Report

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு (DDMCU) கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு (DDMCU) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வேகமாக இலங்கையை நெருங்கும் காற்றழுத்தம்.. உயர்வடையும் கடல் அலைகள்

வேகமாக இலங்கையை நெருங்கும் காற்றழுத்தம்.. உயர்வடையும் கடல் அலைகள்

குளங்களின் தற்போதைய நிலவரம் 

முத்தையங்கட்டு நீர்ப்பாசனப் பிரிவின் கீழ் மொத்தம் 10 குளங்கள் உள்ள நிலையில் அவற்றில் தற்போதைய நிலவரம் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, முத்தயங்கட்டு குளம் – பராமரிப்பு பணிகள் காரணமாக நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை! முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Flood Warning For Lower Areas Of Ponds 

தண்ணிமுறிப்பு குளம் – வான் கதவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதுடன், மழை நிலவரத்தைப் பொறுத்து திறப்பு மேலும் அதிகரிக்கப்படும்.

மாதவளசிங்கம் குளம், கனுக்கேணிக்குளம், உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம், மருதமடுக்குளம் – வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன.

தட்டையார்மலை குளம் – வான்பாயும் நிலையில் உள்ளது. எதிர்பார்க்கப்படும் கனமழை காரணமாக, வான்பாயும் அளவு இன்று முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் குளங்களின் கீழ்ப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. ️

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்

குறிப்பாக கழிவாறுகளுக்கு அண்மையில் மற்றும் தாழ்வான பகுதிகளில் விவசாயம் செய்பவர்கள், இந்த காலகட்டத்தில் நெற்பயிர் நிலங்களுக்கு செல்ல வேண்டாம். தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல வேண்டியிருந்தால்: • உயரமான பாதுகாப்பான இடங்களை முன்கூட்டியே அடையாளம் காணவும்.

வெள்ள அபாய எச்சரிக்கை! முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Flood Warning For Lower Areas Of Ponds

குறைந்தது ஒரு வாரத்திற்கான உணவுப் பொருட்களை உடன் எடுத்துச் செல்லவும். வெள்ள காலத்தில் உணவு வழங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் கடினமாகும் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக நெற்பயிர் நிலங்களுக்கு செல்லாமல் இருப்பது மிகவும் அவசியம்.

குறிப்பாக தண்ணிமுறிப்பு மற்றும் நித்தகைக்குளங்களின் கீழ்ப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும்.

தற்போது அனைத்து குளங்களும் பாதுகாப்பான நிலையில் உள்ளன.  நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ச்சியாக நிலவரத்தை கண்காணித்து வருகிறது.இருப்பினும், எதிர்பாராத கனமழை ஏற்பட்டால் திடீர் வெள்ள நிரம்பல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவதானமாக இருங்கள்! யாழ். உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை

அவதானமாக இருங்கள்! யாழ். உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை

கொழும்பில் பிரபல ஹோட்டலில் சந்தித்துக்கொண்ட முக்கிய அரசியல்வாதிகள்

கொழும்பில் பிரபல ஹோட்டலில் சந்தித்துக்கொண்ட முக்கிய அரசியல்வாதிகள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US