பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரனர்த்தம்.. நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலி!
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 116 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருவதால் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 80 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 253 பேர் காயமடைந்துள்ளதாகவும், 262 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பருவமழையின் தீவிரத்தால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
