மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவான வெள்ள அனர்த்த நிலவரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் கித்துள், உறுகாமம் குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும் மாதுறுஓயா போன்ற இடங்களிலிருந்து வரும் வெள்ள நீர் காரணமாகவும் மட்டக்களப்பு கிரான் பகுதியில் ஆற்று வெள்ளம் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக கிரான் - புலிபாய்ந்தகல் பிரதான வீதியுடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக அப்பகுதி ஊடான போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில்
கிரானிலிருந்து புலிபாய்ந்தகல் செல்வோருக்காக கிரான் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இயந்திர படகு சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான விவசாய குளமாக காணப்படும் உன்னிச்சை குளம் 03 வான்கதவுகள் மூலம் 04 அடி வரை திறக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில், வெள்ளம் வடிந்தோடி,.மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிக்கையின்படி 12,476 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 294 பேர் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை வௌனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam