கொழும்பு, வத்தளை பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும்! - அவசர எச்சரிக்கை விடுப்பு
கொழும்பு, வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் சிறு வெள்ள நிலை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வதால் இந்த நிலை உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் அடுத்த 6 – 12 மணித்தியாலங்களில் சிறியளவிலான வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக குகுலே கங்கை மற்றும் குடா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக மழையுடன் சிறியளவிலான வௌ்ள அபாயமும் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் S.P.C. சுகீஷ்வர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தாழ்வான பிரதேசங்களில் வசிக்கும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வட மாகாணம் போன்று மாத்தறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
