கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழான பிரதேசங்களில் வெள்ள பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழான பிரதேசங்களில் வெள்ள பாதிப்புக்கு உள்ளான நிலையில் அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிளும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் காற்றுடன் கூடிய அதிக மழை பெய்து வருவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் தற்போது நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் காரணமாக இன்று 28.11.2025 காலை முதல் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
அதேவேளை கனகாம்பிகை குளம். கல்மடு குளம், குடமுருட்டி குளம், பிரமந்தனாறு குளம் மற்றும் புழுதியறு ஆகிய குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ள போதும் பிரமந்தனாறு குளம் மற்றும் புழுதியறு ஆகிய குளங்கள் நீர்வரத்து அதிகரித்தமையினால் இரண்டு குளங்கள் வான் கட்டுகள் வெட்டிவிட உள்ளது என மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே அனர்த்த நிலமையினை கருத்தில் கொண்டு குளத்தின் நீரேந்தும் பகுதிகளின் கீழ் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri