Fake Check:இரண்டு வாரங்களாக ஒரே வட்டத்தில் நடக்கும் ஆடுகள்: சீனாவில் அமானுஷ்ய சம்பவம்
Fake Check:வடக்கு சீனாவில் மங்கோலிய (northern China- Mongolia) பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக எவ்விதமான விளக்கமும் இல்லாமல் ஒரே வட்டத்தில் நடந்து கொண்டிருந்த சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.
இது தொடர்பாக காணொளி அங்கு பொருத்தப்பட்டுள்ள CCTV கமராவில் பதிவாகியதாக சீனாவின் அரசு ஊடகமான ‘Peoples Daily’ வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
குறித்த காணொளிப் பதிவில் ஆடுகள் சரியான அளவு வட்டத்தில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. சில ஆடுகள் வட்டத்திற்கு வெளியிலிருந்து இந்த நிகழ்வைப் பார்க்கின்றன ஏனைய ஆடுகள் அனைத்தும் வட்டத்தில் செல்கின்றன.
34 ஆட்டுக் கொட்டகைகள்
இந்த ஆடுகள் ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றன? இதற்கான காரணம் என்ன? என்பதற்குப் பதில் எதுவும் இதுவரை தெரியவில்லை. இங்கு மொத்தமாக 34 ஆட்டுக் கொட்டகைகள் உள்ளன. இவற்றில் 13ஆவது கொட்டகையில் மட்டுமே இந்த அமானுஷ்ய நிகழ்வு நடக்கிறது.
13 என்பது பேய்களுக்கு பிடித்தமான எண் என்றும் இதன் காரணமாகவே இந்த 13ஆவது கொட்டகையில் இவ்வாறு அமானுஷ்ய நிகழ்வு நடப்பதாக இணையவாசிகள் பலர் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
சிலர் இவ்வாறு அந்த ஆடுகள் நடந்துகொள்வதற்கு Listeriosis அல்லது Circling Disease என்ற ஒரு வியாதி காரணம் என்றும் அந்த வியாதி வந்தால் இவ்வாறு வட்டமான பாதையில் ஆடுகள் நடக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த வியாதி மனவழுத்தம் நிறைந்த மிருகங்களுக்கு ஏற்படும் என்றும் அவ்வாறு ஏற்பட்டால் அவை எப்போதும் எதாவது ஒரு மூலைக்குச் செல்லும், பொருட்கள் மீது சாயும் அல்லது இவ்வாறு வட்டமான பாதையில் சுற்றும் என்று கூறப்படுகிறது.
The great sheep mystery! Hundreds of sheep walk in a circle for over 10 days in N China's Inner Mongolia. The sheep are healthy and the reason for the weird behavior is still a mystery. pic.twitter.com/8Jg7yOPmGK
— People's Daily, China (@PDChina) November 16, 2022
