ஜப்பானிய முதலீட்டில் மீளமைக்கப்படவுள்ள புறக்கோட்டை மிதக்கும் சந்தை
ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவர் புறக்கோட்டையிலுள்ள மிதக்கும் சந்தையை சுற்றுலா தளமாக அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மிதக்கும் சந்தையின் நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபை (UDA) நிர்வாகம் தொடர்பாக அண்மையில் எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை அச்சிட முடியாது என அறிவித்த ரணில் : சிரமங்களுக்கு மத்தியில் அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்
அபிவிருத்தி அதிகாரசபை
பொது மற்றும் தனியார் பங்காளித்துவத்தின் கீழ் மிதக்கும் சந்தையை அபிவிருத்தி செய்வதற்கு நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தால் இந்த திட்டத்திற்கு நிதியளிக்க முடியவில்லை என ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த திட்டத்திற்கு சாத்தியமான முதலீட்டாளர்களை தாம் அழைத்துள்ள நிலையில் ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும், புறக்கோட்டையிலுள்ள மிதக்கும் சந்தையை ஜப்பானிய நகர மற்றும் மிதக்கும் சந்தையாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |