கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானத்தை மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் இன்று பிற்பகல் 04.00 மணி முதல் கடும் மழை மற்றும் மின்னல் தாக்கத்துடன் கூடிய மோசமான காலநிலை நிலவியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது.
இன்று பிற்பகல் 04.10 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த Fitz Air விமானம் 8D 834 மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 143 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்ததாகவும், அவர்களை ஏற்றி வந்த விமானம் இன்று மாலை 05.00 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் காலநிலை சீரடைந்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டவுடன் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திருப்பி விடப்படும் என மத்தள விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி மேலும் தெரிவித்தார்.
You may like this video





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
