விசேட வட்டி திட்டம் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு
2025 ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் தொடங்கப்படுவதை நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
2025 வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் அமைச்சரவை ஒப்புதலுக்கு அமைய இந்த திட்டம் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நிதி ஆதரவு
இந்தத் திட்டம் இலங்கையில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கு (FD) மேம்பட்ட வருமானத்தை வழங்குவதன் மூலம் கூடுதல் நிதி ஆதரவை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை குடிமக்களுக்கு இது பொருந்தும். இந்தத் திட்டத்தின் கீழ் நிலையான வைப்புத்தொகைகளை ஜூலை 1, 2025 முதல் டிசம்பர் 31, 2025 வரையிலான காலகட்டத்தில் திறக்கலாம்.
மேலும் அத்தகைய அனைத்து வைப்புத்தொகைகளும் 12 மாத நிலையான வைப்பு காலத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
வைப்புத்தொகைகளின் மொத்த மதிப்பு
இந்த திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைகளின் மொத்த மதிப்பு, பங்கேற்கும் வங்கிகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், ஒரு வைப்புத்தொகையாளருக்கு ரூ. 1 மில்லியனுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
மேலும் ஆண்டுக்கு 1 மில்லியன் ரூபாய் நிலையான வைப்புகளுக்கு நடைமுறையில் உள்ள சந்தை வட்டி விகிதத்தை விட 3 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
