இலங்கை விமான நிலையங்களை கைப்பற்றும் இந்தியாவின் திட்டம்! 5 ஆயிரம் உளவு சேவைகள் களத்தில்
தற்போது இலங்கையில் 5 ஆயிரம் இந்திய உளவு சேவைகள் செயல்பட்டு வருவதாகவும், அவை நாட்டின் விமான நிலையங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருவதாகவும், முன்னனி சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் கடல், எரிசக்தி, மின்சாரம், நிலம், துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை கையகப்படுத்தும் ஒரு நடவடிக்கைக்கு அமைவாக இந்த தரப்பு செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னணி சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்த “இந்தியா பெரிய சகோதரரா?” மாநாடு கொழும்பில் நடைபெற்றது.
முக்கிய துறைமுகங்கள்
அங்கு கருத்து தெரிவித்த துமிந்த நாகமுவ, இந்த திட்டம் இத்துடன் நிற்கவில்லை என்றும், இலங்கையில் உள்ள அனைத்து முக்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களையும் இந்தியா கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி அநுர குமார டிசம்பர் 15 முதல் 17 வரை இந்தியாவுக்கு விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின்போது இந்தியாவுடன் சில ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், அவை இறுதி ஒப்பந்தங்கள் அல்ல என்று அரசாங்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்தது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளின் போது டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான ஒப்பந்தத்தை ஒரு இந்திய நிறுவனத்திற்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக விஜித ஹேராத் பின்னர் செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
அரசியல் உறவு
ஒரு நாடாக இலங்கை இந்தியாவுடனும் மற்ற நாடுகளுடனும் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைப் பேண வேண்டும் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் அந்த பரிவர்த்தனை நாட்டின் சுதந்திரத்திற்கும் இறையாண்மைக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது.
இந்த நேரத்தில், இந்தியா உலகில் ஒரு பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் ஒரு உத்தியில் உள்ளது. அந்த உத்தியின் மூலம், இந்தியா ஆசிய பிராந்தியத்தில் புவிசார் அரசியல் சக்தியையும் சந்தை சக்தியையும் பெற விரும்புகிறது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |