வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் - சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது
வவுனியா - மணியர்குளம், குளப்பகுதியில் இருந்து காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் குளப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு நேற்று (09.03.2023) இரவு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்தில் பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் யசோதரன் வயது 28 என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார்.
தீவிர விசாரணை
குறித்த இளைஞரின் சடலத்தில் காயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் இது மதுபோதையில் நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் ஐந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.