பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது
நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்தச் சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 2 பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்குச் செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களைக் கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றையதினம் யோகபுரம் பகுதிக்குச் சென்று இருந்தனர்.
அதன்போது அங்கு நின்றவர்கள் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார், பொலிஸாரின்
கடமைக்கு இடையூறு விளைவித்தமை, தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட
குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவரைக் கைது
செய்துள்ளனர்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri