நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை (photos)
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் கைதி உட்பட ஐவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து 588 கைதிகள் இன்று (04.02.2023) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் குறிப்பி்ட்டிருந்தார்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகள் விடுதலை
வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் பிரதான சிறைச்சாலை சிறைக்காவலர் சந்திரசிறி மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து ஒரு பெண் கைதி உட்பட ஐவர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை சிறைச்சாலை
இதேவேளை, இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறு குற்றங்கள் புரிந்த 7 கைதிகள் இன்று(4) விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை
தேசிய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
7 ஆண் கைதிகளும்,1 பெண் கைதியுமாக மொத்தமாக 8 கைதிகள் இவ்வாறு விடுதலை
செய்யப்பட்டனர். இவர்கள் தண்டனை கைதிகள் எனவும் அறியமுடிகிறது.





இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
