காத்தான்குடியில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது
போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹைராத் நகர் டெலிகாம் வீதி, கடற்கரை வீதி,நூராணியா பிரதேசங்களில் நேற்றிரவு(06.06.2024) பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கைதான சந்தேக நபர்களிடமிருந்து ஒருதொகை ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவரிடமிருந்து ஆறு போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைதான சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan