பொலிஸாரிடம் சிக்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல்
பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி வீட்டுக்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது
இந்தக் கும்பல் கடந்த 9 ஆம் திகதி, தங்களைப் பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு போதைப்பொருள் சோதனை செய்வது போன்று கேகாலை - திக்ஹேன பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து ஒரு கோடி 75 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளது.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்தக் கொள்ளைக் கும்பல் நேற்று கைது செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் அம்பாறையிலும், ஒருவர் எம்பிலிப்பிட்டியிலும், மற்றைய இருவரும் கேகாலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
