நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்துக்களில் ஐவர் மரணம்

Srilanka Accident Matara Kandy Kegala
By Rakesh Nov 22, 2021 06:21 PM GMT
Report

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 5 விபத்துக்களில் ஐவர் மரணமடைந்தனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சென்று வடிகானொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த நபரும் தெனியாய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது மோட்டார் சைக்கிள் செலுத்துநர் மரணமடைந்தார்.

கோட்டபொல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு மரணமடைந்தார். இரத்தினபுரி பெல்மடுல்ல வீதி, பாத்தகொட பிரதேசத்தில் லொறியொன்று மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒரு லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார். கடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபரே உயிரிழந்தார்.

இதேவேளை, மாத்தளை – கண்டி வீதி, வரக்காமுர பிரதேசத்தில் கண்டி நோக்கிப் பயணித்த வானொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கொங்ரீட் தூண் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த வானின் சாரதி, மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார். வரக்காமுர பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது நபரே உயிரிழந்தார்.

மாத்தறை, திஹகொட பொலிஸ் பிரிவு, ஹக்மன வீதி நாதுகல பிரதேசத்தில் மாத்தறை நோக்கிப் பயணித்த ஓட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பாதசாரி பெண்ணொருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டோ சாரதி மற்றும் பாதசாரி பெண் ஆகியோர் மாத்தறை வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது ஓட்டோ சாரதி மரணமடைந்தார். நாமின பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயது நபரே உயிரிழந்தார்.

கேகாலை, ருவன்வெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரக்காபொல கரவனெல்ல வீதியில் வரக்காபொல நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்று பாதசாரி பெண்ணொருவர் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண், கரவனெல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார். ரூவன்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது நபரே உயிரிழந்தார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US