தம்மிக்க பாணி அருந்திய ஐவருக்கு கொரோனா - பாரிய வைரஸ் கொத்தணி ஏற்படும் அபாயம்
கேகாலை தம்மிக்க பண்டார என்பவரினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட கொரோனாவை அழிக்கும் பாணத்தை பருகிய ஐவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
வரக்காபொலை மற்றும் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுவன் மற்றும் அவருடைய தாய் உட்பட ஐவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாக வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
தாம் அந்த பாணத்தை பருகியதாக தொற்றுக்குள்ளானவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் தகவல் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த ஐவரும் தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வரிசையில் பல மணித்தியாலங்கள் நின்றவர்களுக்கும், செல்பவர்களுக்கும் கொரோனா தொற்றுவதற்கான ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அந்த பிரதேசங்களுக்கும் பாரிய ஆபத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுகாதார சட்டங்களை மதிக்காமல் போலியான நபர்களின் பின்னால் சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

வெறும் 10 வருடங்களில் முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 42 வயது நபர் News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
