தமிழர் பகுதியில் 40,000 போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது
கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 போதைப் பொருள் மாத்திரைகளை யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது போதைப்பொருட்களுடன் 5 சந்தேக நபர்களை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
முழங்காவில் பொலிஸார்
இச்சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிஸார் சந்தேக நபர்கள ஐவரையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்திய பொழுது எதிர்வரும் 06.01.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
