திருகோணமலையில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது (Video)
திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் இன்றையதினம் (27.07.2023) இடம்பெற்றுள்ளது.
தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடியதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்ற நிலையில் சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை செய்தபோது தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களுக்கு எதிராக பல வழக்குகள்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 20- 45 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களுக்கு எதிராக பல வழக்குகள் இடம் பெற்று வருகின்றமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டசந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |