கடற்றொழில் சார் கற்கைகள் தொடர்பான பல்கலைக்கழக பீடம் துரித கதியில் அமைக்கப்படும்..! கடற்தொழில் அமைச்சர் உறுதி
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் ஒழுங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று(101.08.2026) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர்மஸ்தன்,செல்வம் அடைக்கலநாதன்,து.ரவிகரன் ஆகியோருடன் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த ஹகவத்த மற்றும் திணைக்கள அதிகாரிகள் பொலிசார்,கடற்படையினர் கடற்தொழில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
கடற்தொழில் நடவடிக்கை
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை கடற்படையினரின் உதவியுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் மீன்வளப்பினை மேம்படுத்தல்நடவடிக்கை மேற்கொள்ளல் சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 54 வீடுகள் இந்த மாத இறுதிக்குள் கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளப்பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது விரைவில் அது அமையவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களதின் ஆளணி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய இந்த மாதம் 19 ம் திகதி 8 பேர் புதிய நியமனம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 4542 கடற்றொழிலாளர் குடும்பங்கள் ஊடாக இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை 8220.49 மெட்ரிக்தொன் மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோது இந்த அளவு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களும் உள்ளடங்கப்பட்டுள்ளது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.




