கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரட்டை வேடம் போடுகிறாரா..! சாட்சியங்களை வெளிப்படுத்திய மீனவ பிரதிநிதி

Indian fishermen Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Fisherman
By Erimalai Jun 23, 2026 12:46 PM GMT
Report

தாம் கடலட்டை வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் பேசியது அரசாங்கத்துடன் இணைந்து இயக்குகிறரா என்ற சந்தேகத்தை தூண்டியுள்ள எனவடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று(23.06.2026) நடத்த ஊடகச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பெயர் பலகை வைத்து சர்ச்சையை கிளப்பிய இராணுத்தினர்

உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பெயர் பலகை வைத்து சர்ச்சையை கிளப்பிய இராணுத்தினர்

கடற்றொழிலாளர்களின் முக்கிய பிரச்சினை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று ஒரு கிலோ மீனின் விலை 2000 தொடக்கம் 3000 ரூபாவிற்கு மேல் சென்றுள்ளது. இதற்கு மீன் பெருக்கம் இல்லாமைக்கு காரணம் அதிகளவிலான உள்ளூர் இழுவை மடிவு படகுகளின் சட்ட விரோத மீன்பிடி முறையை காரணமாக இருப்பதுடன், இந்திய இழுவை மடி படகுகளின் மீன் பெருக்கிடங்களை இல்லாமல் செய்வதாகும்.

மீன் பெருக்கம் குறைந்து சென்றுள்ளமையால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் மீன் குறைந்த விலை 1500 இருந்து 3500 வரை விற்பனையாகிறது.

இதேவேளை, கடலட்டை பிடித்தல் தொழில் காரணமாக தீவக கடல் உட்பட அனைத்து கடல் பிரதேசங்களிலும் மீன் உற்பத்தியிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களின் வாழ்விடமான பவளப்பாறைகளும், தற்போதும் தொடர்ச்சியாக மின்னொளி பாய்ச்சி சுருக்குவலை தொழில் இடம்பெற்று வருவதனாலும் அதிகளவான சிறிய மீன் குஞ்சுகள் அழிக்கப்படுகின்றன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரட்டை வேடம் போடுகிறாரா..! சாட்சியங்களை வெளிப்படுத்திய மீனவ பிரதிநிதி | Fishermen Representative Criticizes Gajendrakumar

இதன் காரணமாக சிறு கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடித்தொழிலில் பாரிய பாதிப்பான நிலையில் காணப்படுவதாகவும், கூலர் வாகனங்களில் சட்டவிரோத ஒளிபாய்ச்சி மற்றும் சுருக்கு வலை மீன்பிடி முறை மூலம் பிடிக்கப்பட்ட மீனினங்களை ஏற்றிக்கொண்டு செல்கின்ற போது, உரிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.

மேலும், தற்போது கடற்படையின் பணி கடற்கரையிலிருந்து எவன் உளவியந்திரத்தை பயன்படுத்தி கரவலை தொழிலை மேற்கொள்கிறானோ அவனை மட்டும் கைது செய்வது தான்.

தற்போது கடற்படை இலை, குழைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றவர்களையோ, அல்லது மின் ஒளி பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபடுபவர்களையோ கைது செய்வதில்லை.

அரசாங்கத்துடன் சேர்ந்து விட்டாரா கஜேந்திரகுமார்

கடற்படை பல கடற்றொழிலாளர்களை தாக்கியதாகவும், கடற்படை தாக்கியவர்களை தாம் நேரில் சென்று சந்தித்ததாகவும் இது தொடர்பில் கடற்படைக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்கு கடற்படையால் தாக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் அச்சப்படுகிறார்கள்.

இவ்வாறான சட்ட விரோத செயல்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில், நாங்கள் கடற்தொழிலுக்கு சென்று இப்போது பல மாதங்கள் ஆகுகின்றன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரட்டை வேடம் போடுகிறாரா..! சாட்சியங்களை வெளிப்படுத்திய மீனவ பிரதிநிதி | Fishermen Representative Criticizes Gajendrakumar

கடலட்டை வளர்ப்பு மூலம் கடல் வளங்கள் அழிந்து, மீன் இனம் பெருக்கம் இல்லாமல் போகின்றது. இதனால் கடல் அட்டை வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கடற்றொழில் சமூகம் குறிப்பிட்டு வந்த நிலையில், அண்மையில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடல் அட்டை பண்ணைகளை பாரம்பரிய கடற்றொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கடல் அட்டை வளர்ப்பு பண்ணை மீண்டும் வழங்கப்பட்டால் அதற்கு தேவையான கடலட்டை குஞ்சுகளை கடலில் இருந்து தான் பிடித்து கடலட்டை வளர்ப்பு பண்ணைகளில் விட வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் கடலில் கடலட்டை குஞ்சுகளை உண்டு இனப்பெருக்கம் செய்கின்ற மீன்கள் இல்லாமல் போய்விடுவதுடன், இந்த நிலைமையை பார்த்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகிறதா என்ற எண்ணம் தோன்றுகின்றது என்றார்.  

நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை! செங்கோலை கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சியினர்

நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை! செங்கோலை கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சியினர்

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் விநியோகத் தடை!

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் விநியோகத் தடை!


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US