திருகோணமலையில் சிறுகடல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலையில் சிறு கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுகடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பெரிய படகுகளையும், தடை செய்யப்பட்ட வலைகளையும், வெடி பொருட்களையும் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால் தங்களுடைய அன்றாட ஜீவனோபாயத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட கடற்படையினர் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அதை நிறுத்துமாறும், தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குள் ஆழ்கடல் மீனவர்களைத் தடை செய்ய வேண்டும் எனவும் கோரி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு கடல் மீனவர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












