மன்னார் மாவட்ட மீனவர்கள் சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக பாதிப்பு
மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகத் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடல் பகுதியில் வீசி வரும் காற்று காரணமாக மூன்றாவது நாளாக அதிகளவான மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்த்து வருவதாக தெரியவருகிறது.
மன்னார் தீவக பகுதிகளைச் சூழ்ந்த கடல் பரப்பின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றமையாலும், கடல் பகுதியில் காற்று வேகமாக வீசுவதனாலும் மீன்பிடி நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் உள்ளூர் மீனவர்களுடைய படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் வெள்ளத்தால்
அடித்துச் செல்லப்பட்டு கடற்கரையினை அண்மித்த பகுதிகளில்
அடையவிடப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.






பதினாறாவது மே பதினெட்டு 1 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
