தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்ற உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நீதிமன்ற உத்தரவு நேற்றையதினம்(17) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்களை கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இழுவைப் படகுகளுடன் கைது செய்தனர்
விளக்கமறியல்
பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களையும் இழுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர், மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், குறித்த கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றையதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
