கடற்றொழிலாளர்களை பாதிக்கும் இரட்டை மடி வலை உற்பத்தி(Video)
கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றேன். இந்திய உச்ச நீதிமன்றமானாது எங்களுக்கு அதாவது இலங்கை மக்களுக்கு சார்பாக தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
இரட்டை மடி வலை உற்பத்தி
அதாவது, இரட்டை மடி வலை உற்பத்திகளுக்கு தடை விதித்து எங்கள் கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தமையே ஆகும்.
இரட்டை மடி வலை உற்பத்தியினால் சாதாரண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாங்கள் பலரிடமும் கதைத்துள்ளோம் ஆனால் அதற்கு சரியான தீர்வு கிடைக்காமலேயே இருந்து வந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பும் தள்ளுபடியாகியுள்ளது.
ஏன் இவ்வாறான செயல்களை செய்கின்றீர்கள்? தென்னிலங்கையில் உள்ளவர்கள் தான் எங்களை சுரண்டினார்கள் என்றால் அயல் நாடான நீங்களும் இவ்வாறு செய்கின்றீர்கள்? தொப்புள் கொடி உறவென்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தையே ஆகும்.
உங்கள் பிரதேசத்தில் ரோலர் போடுமளவிற்கு எங்களுக்கும் அனைத்து வசதிகளும் இருந்தது. ஆனால் அவை யுத்தத்தில் அழிந்துவிட்டன. யுத்தத்தினால் நாங்கள் அதிகளவில் கஸ்டப்பட்டு தான் தற்போது ஒரு வேளை சாப்பிடும் அளவிற்காவது தேறி வந்துள்ளோம்.
நாட்டு நிலமை
நாங்கள் எல்லா துன்பத்தையும் அனுபவித்துதான் வந்துள்ளோம். எங்களிடம் தற்போது மிஞ்சியிருப்பது பேசுவதற்கான உயிர் மட்டுமே. நாங்களும் எவ்வளவு தான் பொறுமையாக இருப்பது. அதனால் வீண் பலி சுமத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள். உங்கள் நாட்டு கடற்றொழிலாளர்கள் உங்கள் பொறுப்பாகும்.
நாடு தற்பொழுது மோசமான நிலையில் உள்ளது. நாம் தான் அதனை சரி செய்ய வேண்டும்
மக்களாகிய நாம் இன, மத வேறுபாடின்றி மனிதர்களென்ற ரீதியில் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் தற்போதைய நிலையை மாற்றலாம்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
நாடளாவிய ரீதியில் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்(Video) |