நாடளாவிய ரீதியில் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்(Video)

Kilinochchi Sri Lanka Sri Lankan Peoples
By Sudaron Jul 07, 2022 11:40 AM GMT
Report

கிளிநொச்சி மக்கள் தமக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று(07) முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி, ஞானிமடம், கறுக்காய் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் தமக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் ஞானிமடம் பாடசாலை முன்பாக ஒன்று கூடி, பூநகரி பிரதேச செயலகம் வரை சென்று அங்கு பிரதேச செயலாளர் மாவட்ட அரசு அதிபர் ஆகியோருக்கான மனுக்களை கையளித்துள்ளனர்.

கவனயீர்ப்பு போராட்டம்

நாடளாவிய ரீதியில் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்(Video) | A Struggle For Attention

“கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசமானது வருட முழுவதும் குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்ளுகின்ற ஒரு பிரதேசமாக காணப்படுகிறது.

இந்த பிரதேசத்தில் குடிநீர் விநியோகத்துக்காக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை நிறைவேற்றப்படவில்லை. இதனால் பிரதேசத்தில் வாழும் ஏராளமான மக்கள் தமக்கான குடிநீர் பெற்றுகொள்வதில் நாளாந்தம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்(Video) | A Struggle For Attention

இந்த நிலையில் தமக்கான குடிநீர் வழங்குவதற்கு இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏற்கனவே குடிநீர் வளம் கொண்ட பிரதேசங்களுக்கே குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.


குடிநீர் வசதியின்மை

நாடளாவிய ரீதியில் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்(Video) | A Struggle For Attention

இதேவேளை எந்தவித குடிநீர் வசதியும் இல்லாத தங்களுடைய பிரதேசத்தின் ஊடாக குழாய்கள் பொருத்தப்பட்டு வேறு கிராமங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகின்ற போதும் தமக்கு இதுவரை குடிநீர் தரவில்லை.

நாடளாவிய ரீதியில் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்(Video) | A Struggle For Attention

குறித்த பிரதேசத்தில் சுமார் 294க்கு மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை குடிநீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த காலங்களிலே பிரதேச சபையினால் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டிருந்தாலும் தற்போது எரிபொருள் இன்மையை காரணம் காட்டி தங்களுக்கான குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.” என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நாடளாவிய ரீதியில் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்(Video) | A Struggle For Attention

பாதுகாப்பான தொடருந்து கடவை அமைக்குமாறு கோரி செட்டிகுளம் பொதுமக்களால் இன்று (07) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம், துடரிக்குளம் வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் அண்மையில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

நாடளாவிய ரீதியில் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்(Video) | A Struggle For Attention

இதேவேளை குறித்த கடவையில் கடந்த வருடம் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் மௌலவி ஒருவரும் மரணமடைந்திருந்தார்.

இதனையடுத்து இந்த தொடருந்து கடவையை பாதுகாப்பானதாக அமைத்து தருமாறு கோரி பொதுமக்களால் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாதுகாப்பற்ற கடவையில் உயிர்போவதை இன்றே நிறுத்துவோம், எம்மை ஏற்றிச்செல்லவே புகையிரதம், எம்மை ஏற்றிக்கொல்ல அல்ல, அதிகாரிகளே நடவடிக்கை எடுங்கள் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.

செய்தி-ஷான்

காரைநகர் - வலந்தலை சந்தியை முடக்கி போராட்டம்

காரைநகர் - வலந்தலை சந்தியை முடக்கி பொது மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலந்தலை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் நிரப்பும் கருவி நேற்றையதினம் பழுதுபட்டது. ஆகையால் அந்த கருவியினை திருத்தம் செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் முயற்சிக்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

எரிபெருளை பெறுவதற்கு நாங்கள் 5 நாட்களுக்கும் மேலாக வரிசையில் வந்து காத்திருக்கின்றோம். ஆனால் நேற்று (06) காலை எரிபொருள் நிரப்பும் கருவி பழுதாகிவிட்டதாக கூறி எரிபொருள் நிரப்புவதனை இடை நிறுத்தினார்கள். ஆனால் அந்த நிரப்பும் கருவியை திருத்துவதற்கு ஏற்பாடு செய்யவில்லை.

நாடளாவிய ரீதியில் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்(Video) | A Struggle For Attention

நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தான் வரிசையில் காத்திருக்கின்றோம். எரிபொருள் நிரப்பு நிலையத்தினரின் இந்த பொறுப்பற்ற செயற்பாடு எமக்கு வருத்தமளிக்கின்றது.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

பழுதடைந்த கருவியை திருத்தம் செய்யும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் புத்தளத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றார். அவர் வருகை தந்த பிறகு கருவியினை திருத்தம் செய்துவிட்டு நாளை காலை (8) 6 மணிக்கு எரிபொருள் வழங்க ஆரம்பிப்போம்.

நாடளாவிய ரீதியில் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்(Video) | A Struggle For Attention

தற்போது வரிசையில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் டோக்கன் விநியோகிப்போம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் கூறியுள்ளார்.

அதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 1500 ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிகளுக்கு 2500 ரூபாவுக்கும் பெட்ரோல் விநியோகிப்பதாகவும், டீசல் வாகனங்கள் அனைத்திற்கும் 7500 ரூபாவிற்கும் எரிபொருள் வழங்குவதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து வீதி முடக்கலை மக்கள் கை விட்டுள்ளனர்.

செய்தி-கஜிந்தன்,ராகேஷ்,தீபன்

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US