கடலில் வீழ்ந்து மீனவர் மாயம் : தொடர்கின்றது மீட்புப் பணி
காலி, மாகொல்ல மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றில் பயணித்த நபர் ஒருவர் கடலில் வீழ்ந்து காணாமல்போயுள்ளார் என்று காலி துறைமுகப் பொலிஸாருக்கு இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி மாகொல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இழுவைப் படகு புறப்பட்டுச் சென்ற நிலையில், அதில் பயணித்த மீனவர் ஒருவர் நேற்று மாலை கடலில் தவறி விழுந்து காணாமல்போனார் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்து காணாமல்போயுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
ரத்கம பகுதியைச் சேர்ந்த 25 வயது நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
காணாமல்போனவரைத் தேடும் நடவடிக்கையை காலி துறைமுகப் பொலிஸாரும் கடற்படையினரும்
இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.



