கடற்றொழிலுக்கு சென்றவருக்கு நேர்ந்த அவலம்!
முதலை இழுத்துச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை, ஹுங்கம, கலமெட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 18 ஆம் திகதி இரவு அம்பாந்தோட்டை, ஹுங்கம, கலமெட்டிய கடற்கரைப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த போது முதலை இழுத்துச் சென்றுள்ளது.
சடலமாக மீட்பு
இந்தநிலையில் இரண்டு நாட்கள் கழித்து நேற்று(20) திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தப் பகுதியில் முதலைகள் இழுத்துச் செல்லப்பட்டு கடற்றொழிலாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கலமெட்டிய கடற்கரை பகுதியில் விட்டுச் செல்கின்றனர் என்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri