கௌதாரிமுனை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்
பூநகரி, கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை பார்வையிடுவதற்கான விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு இன்று(14) காலை சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தைப் பார்வையிட்டதுடன், அது தொடர்பாக துறைசார் தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளார்.
முன்பதாக கிளிநொச்சி, புதுமுறிப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 30 மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டிகளைப் புனரமைப்பதற்குக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், முதற் கட்டமாகப் பூர்த்தி செய்யப்பட்ட 10 தொட்டிகள் உத்தியோகப்பூர்வமாக சமூக அமைப்புக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கிளிநொச்சி தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து குறித்த தொட்டிகளை சமூக அமைப்புக்களிடம் கையளித்தார்.
எஞ்சிய தொட்டிகளையும் சமூக அமைப்புக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்துமாறு கடற்றொழில் அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அக்கராயன் மற்றும்
புதுமுறிப்பு ஆகிய கிராமிய நன்னீர் மீன்பிடி அமைப்புக்களுக்கான மீன்பிடி
வள்ளங்களைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.




ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam