யாழில் கடற் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தடை! (PHOTO)
கடற் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றத்தில் பொலிஸாரினால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய இழுவைப் படகுகளை அனுமதிக்க கூடாது என்றும், உயிரிழந்த இரண்டு கடற் தொழிலாளர்களுக்கு நீதி கோரியும், அமைச்சர் இதற்கான நடவடிக்கையை எழுத்து மூலம் வழங்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கடற் தொழிலாளர்களினால் இப்போராட்டம் வீரியம் பெற்றிருந்தது. எனினும் அமைச்சருடனான கலந்துரையாடல்களின் போது அமைச்சர் எழுத்து மூலமான உத்தரவாதத்தை வழங்க மறுத்ததையடுத்து போராட்டம் மேலும் விரிவடைந்தது.
இந்த நிலையில், நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைவதைக் காரணம் காட்டியும், உயர் தரப் பரீட்சையினை தொடர்படுத்தியும், பருத்தித்துறை நீதிமன்றத்தில் பொலிஸாரினால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற கட்டளையின் பிரகாரம், வீதி மறியலில் ஈடுபட்டுள்ள கடற் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். அதற்கு கடற் தொழிலாளர்கள“ எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடி படையினரும் போராட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan