மீன் விற்பனையில் வீழ்ச்சி: வெளியான காரணம்
மக்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் மீன் விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
மீன் விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணத்தினால் மீன் விலைகளிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீன் விலை வீழ்ச்சியினால் கடற்றொழிலாளர்களும் வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரையறுக்கப்பட்ட உணவு கொள்வனவு
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும், அநேகமான மக்கள் உணவு கொள்வனவினை வரையறுத்துக் கொண்டுள்ளதாகவும் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே நாட்டில் மீன் விற்பனையில் பாரியளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam